Tuesday, September 21, 2010

ஆன்மீகம் - மறைக்கப்பட்ட உண்மைகள்

ஆன்மீகவாதி என்றால் முற்றிலும் துறந்து சாமியார் போல உள்ளவன் என்று பலர் நினைத்துக்கொண்டிருகின்றனர்.
கண்டிப்பாக அது உண்மை இல்லை என்பதை பற்றியே இந்த பதிவு.
உங்களை நீங்களே நன்றாக தெரிந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பதே உண்மையான ஆன்மிகம்.உங்கள் உணர்வுகளை அடக்கி ஆளாதீர்கள்.உணர்வுகளை அடக்கி ஆள்வதே பல மனநிலை பிரச்சினைகளுக்கு காரணம் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.ஓஷோ,கிருஷ்ணமூர்த்தி என்று பலர் உள்ளனர்.இவர்கள் பலரினை பற்றி தெரிந்து கொண்டு உங்களுக்கு ஏற்ற வழியினை தேர்தெடுங்கள்.இவர்களின் வழிகள் வேண்டுமானால் வேறுபடலாம் ஆனால் சேரும் இடமொன்றுதான்.

அட ஆன்மீகமா அது நமக்கல்ல என்று இருக்காதிர்கள்..வாழ்வை துறப்பதல்ல ஆன்மிகம் வாழ்வை அனுபவிப்பதே உண்மையான ஆன்மீகம்.

நன்றி: The Rebel

Tuesday, March 30, 2010

மாத்யூ ஹெய்டன் மட்டையும் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும்

ஐ.பி.எல் ஆட்டங்கள் போகும் பாதையப் பார்த்தால் கிரிக்கெட் உருப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது. வெகுநாட்களாகவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மென்கள் கடவுள்களாகவும், மற்றவர்களை சார்லி, வையாபுரி லெவலுக்கு வைத்துப் பார்க்கும் நிலையே இருந்து வந்தது. அதுவும் பல போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் ஒரு படி மேலே கீழே போய் காமெடி பீஸாகவே மாறிவிடுவார்கள்.

சூப்பர்கள் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆட்டம் பார்த்தவர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும். பந்துவீச்சாளர்கள் உருப்படியாக பந்துவீசினால் ஆட்டத்தை முழுமையாகவே கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும்.

அதுவும் ஒரு பந்துவீச்சாளர் மட்டும் கூட தனது நான்கு ஓவர்களை ஒழுங்காகப் போட்டால் அவர் உடன் வீசப்படும் ஓவர்களையும் சேர்த்து எட்டு ஓவர்கள் கூட முழுமையாக கட்டுப் படுத்தப் பட்டு விடுகிறது,அதைத்தான் முரளி நிகழ்த்தினார். . இந்த கட்டத்தில் களத் தடுப்பாளர்களுக்கும் கொஞ்சம் நம்பிக்கை பெருகி அவர்களும் கூட வேலை ஒழுங்காக செய்ய ஆரம்பித்தால் சுலபமாக ஆட்டத்தை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடிகிறது.

கடைசி ஓவரை உருப்படியாக போட்டால் கூட போதும். அண்ணன் ஜோகிந்தர் டோனியை கேப்டன் வேலையில் நிரந்தரம் ஆக்கியது கூட அப்படித்தான்.


ஆட்டம் டையில் முடிந்தால் கூட சூப்பர் ஓவரை கொஞ்சம் கவனத்துடன் போட்டால் சுலபமாக வெல்ல முடியும். ஆக மட்டையாளர்கள் கையிலிருந்த ஆட்டம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக பந்துவீச்சாளர்களுக்கும் மரியாதை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

சூழ்நிலை சமநிலையியல் விதிகளின்படி அனைத்தும் சமநிலையில் இருந்தால் மட்டுமே அந்த சூழல் நிலைத்து நிற்கும். இது அறிவியல், வரலாறு, புவியியல் ரீதியாக பலமுறை நிரூபிக்கப் பட்ட ஒன்று.

கிரிக்கெட்டில் மட்டையர்கள் மட்டும் மன்னர்களாக இருந்த நிலைமாறி பந்துவீச்சாளர்களுக்கும் உரிய மரியாதை கிடைக்க ஆரம்பித்திருப்பதால் கிரிக்கெட் உருப்பட்டு விடும் என்றே தோன்றுகிறது.

Monday, February 1, 2010

தாத்தாவின் செம்மொழி மாநாடும்... பேரனின் 'குவாட்டர் கட்டிங்'கும்!

தமிழ்ப் படம் என்ற பெயரில் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகையும் துவைத்து தோரணம் கட்டியிருக்கும் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி, அடுத்து தயாரிக்கும் இன்னொரு படத்துக்குப் பெயர் என்ன தெரியுமா?. சுத்தமான 'தமிழ்'ப் பெயர் - குவாட்டர் கட்டிங்!!

இது தமிழ்ப் பெயரா... என்ற ஆராய்ச்சியெல்லாம் அப்புறம்... முதலில் விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த குவாட்டர் கட்டிங்கை தயாநிதி நேரடியாகத் தயாரிக்கவில்லை. தமிழ்ப் படம் என்ற படத்தை எப்படி சிஎஸ் அமுதன் அண்ட் கோவின் 'வொய் நாட்' என்ற கம்பெனி தயாரித்து பின்னர் தயாநிதியின் க்ளௌட் நைனுக்கு விற்றதோ, அதே பாணியில்தான், குவாட்டர் கட்டிங்கும் தயாராகிறதாம்.

இந்தப் படத்திலும் ஹீரோ அதே மிர்ச்சி சிவா-தான்.

சத்தமில்லாமல்... அதே நேரம் வேகவேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தமிழ் தலைப்புதானா இது?

'இந்த தலைப்பு மற்றும் வரி பிரச்சினை பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை... காரணம் குவாட்டர், கட்டிங் என்பதெல்லாம் வழக்குச் சொல்லில் வந்துவிடும்' என்கிறார்கள் கூலாக.

செம்மொழி மாநாடு நடக்கும் நேரமாகப் பார்த்து இந்த 'கட்டிங்'கை விடுவார்களோ, என்னமோ தெரியவில்லை.

ஆஹா, தமிழுக்கு குவார்ட்டர், கட்டிங் என இரண்டு புதிய வார்த்தைகள் நல்வரவாக வந்திருக்கின்றன. சந்தோஷப்பட வேண்டிய சமாச்சாரமல்லவா!

தமிழன் ரசனையை என்னமாய் புரிந்து வைத்திருக்கிறார்கள்!

'தமிழ்ப் படம்'- திரை விமர்சனம்

நடிகர்கள்: சிவா, வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம்எஸ் பாஸ்கர், சண்முகசுந்தம், பரவை முனியம்மா, திஷா பாண்டே

இசை:கண்ணன்
கேமிரா: நீரவ்ஷா
இயக்கம்: சிஎஸ் அமுதன்
தயாரிப்பு: தயாநிதி அழகிரி
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

தமிழ் சினிமா தன் முகத்தில் தானே உமிழ்ந்து கொண்டுள்ளது.. அல்லது தன்னைத் தானே ஒருமுறை சவுக்கால் அடித்துக் கொண்டுள்ளது, தமிழ்ப் படம் மூலம்.

ஒரு விமர்சகனாக நாம் என்னென்ன குற்றங்களைச் சொல்கிறோமோ, அதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டதுபோல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆண் குழந்தையே ஆகாத கிராமத்தில் பிறந்து, பாட்டியின் தயவுடன் தப்பித்து, சிறுவனாக சைக்கிளில் ஏறி உட்கார்ந்து ஒரு மிதி மிதித்ததும் பெரியவனாகி அநியாயத்தை தட்டிக் கேட்டு, அம்சமான பெண்ணைப் பார்த்து காதலாகி, அவளைக் 'கவிழ்க்க' ஒரே இரவில் பரதம் கற்று, ஏழை என்பதால் அந்தக் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணின் அப்பாவிடம் சவால் விட்டு, ஒரே பாட்டில் கோட்டீஸ்வரனாகி, அப்படியும் அப்பா பேர் தெரியாதவன் என்ற அவப்பெயர் மிஞ்சுவதால், சினிமாக்காரன்பட்டிக்கு அப்பாவைத் தேடிப் போய், குடும்பப் பாட்டின் உதவியுடன் ஒன்றிணைந்து, இடையில் மறந்துபோன போலீஸ் கடமையை சரியாக செய்து ஓவர் நைட்டில் ஹீரோவாகும் ஒரு இளைஞனின் கதைதான்...(ஸ்ஸ் அப்பா...) நம்ம தமிழ்ப்படம்!!

இந்தக் கதைக்கு (?!) இடையில் கிழிபடும் படங்களையெல்லாம் நீங்கள் முன்பே பார்த்திருந்தால் இந்தப் படம் உங்கள் வயிற்றை சிரிப்பால் புண்ணாக்குவது நூறு சதவிகிதம் உறுதி.

இந்தக் கதைக்கு ஸாரி... இந்தக் காட்சிகளுக்கென்றே அளவெடுத்து செய்யப்பட்டவர் மாதிரி அம்சமாகப் பொருந்துகிறார் சிவா. 'லாலாக்கு டோல் டப்பிமாவை' உச்சரிக்கும்போது அவர் காட்டும் உடல் மொழி... சான்ஸே இல்லை... சிரிப்பொலியில் தியேட்டரின் கூரை பிய்ந்துவிடும் போலிருக்கிறது!.

ஒரு துணுக்கை ரசித்து சிரித்து நிமிர்வதற்குள், கூடவே ஒட்டிக் கொண்டு வரும் ஒரு கொசுறு துணுக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறது. ஆனால் இவை அனைத்தும் நாம் ஏற்கெனவே பார்த்து ரசித்த காட்சிகள்தான்.

வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம்எஸ் பாஸ்கர், சண்முகசுந்தரம் கூட்டணி அதகளம் பண்ணுகிறது. அதிலும் கல்லூரி மாணவராக ஜாவா புத்தகத்துடன் சினிமாக்காரன்பட்டிக்குள் நுழையும் வெண்ணிற ஆடை மூர்த்தி வாயில் சேட்டை ஏதும் செய்யாமலேயே குபீர் சிரிப்பை வரவழைக்கிறார்.

அவர் கெட்ட வார்த்தை பேச முற்படும்போது நட்ட நடு ராத்திரியிலும் காக்கா தலையைக் கொத்த வருவது இன்னொரு லஷ்மி வெடி!

கதாநாயகி? வழக்கமான தமிழ்ப் படத்தில் அந்தப் பாத்திரத்துக்கு என்ன வேலையோ, அதே வேலைதான் இந்தப் படத்திலும் திஷா பாண்டே என்ற புதுமுகத்துக்கும்!

'அண்டர்கவர் ஆபரேஷன்' எனும் பெயரில் ரவியை போட்டுத் தள்ள சிவா உபயோகப்படுத்தும் டெக்னிக், குறிப்பாக அவர் பிரயோகிக்கும் வசனங்களை தனியாக நடந்து செல்லும்போது நினைத்தாலும் தானாக விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்... டெல்லி கணேஷ் காட்சியும் அதே ரகம்!

பாண்டிச்சேரி கடற்கரையில் 'மப்பாகி' விழுந்துகிடக்கும் போது சிவா முணுமுணுக்கும் வசனங்களை இங்கே சொல்லிவிட்டால், சுவாரஸ்யம் போய்விடும்... போய் தியேட்டரில் பார்த்து சிரித்து வயிறு புண்ணாகக் கடவது!

குறைகள்?

அதற்கென்ன... தாராளமாய் ஏராளமாய் இருக்கின்றன.

கதை என்ற எதுவுமே இல்லாமல், அதே நேரம் பழைய படங்களின் காமெடிக் காட்சிகளின் தோரணமாகவே இந்தப் படம் இருப்பதால், கடைசி வரை எந்தக் காட்சியிலும் ஒன்ற முடியவில்லைதான்.

இந்தப் படத்தில் ஏகடியம் செய்யப்படும் அத்தனை படங்களும் சிகரம் தொட்டவை... அதாவது நம்மால் சிகரத்தில் உட்கார்த்தி வைக்கப்பட்டவை. இப்போது அவற்றைத் திரும்பிப் பார்த்து நாமே சிரிக்கிறோம் என்றால்...இது ரசனையின் குறைபாடா... நமது முந்தைய ரசனைக்கு நாமே சாணி அடித்துக் கொள்கிறோம் என்றுதானே அர்த்தம்.. அல்லது இனி அந்த மாதிரி படங்கள் வந்தால் புறக்கணித்து நமது ஒஸ்தியான ரசனையையாவது காட்டுவோமா.. பார்க்கலாம்!

க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க கொஞ்சம் இழுப்பது போலத் தெரிகிறது.

ஆனால், இந்தப் படத்தில் எங்கும் ஆபாசமோ, அருவருப்போ இல்லை என்பது மிக முக்கியம். குறிப்பாக சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் பார்த்தாலும், 'அட, ரெம்ப ஓவராத்தான் போய்ட்டோமோ!' என்று கேட்டுக் கொள்வார்கள். அந்த அளவு நாசூக்காக விளாசியிருக்கிறார்கள்.

இது காமெடியா, படத்தின் தொடர் காட்சியா என்றெல்லாம் அனாவசிய கேள்வி எழுப்பாமல் இரண்டு மணிநேரம் சிரிக்க ரெடியா... கிளம்புங்க தமிழ்ப்படத்துக்கு!

Monday, January 4, 2010

எப்போதோ படித்த ஒரு புத்தகம்.

புத்தகத் தலைப்பு, ""அறியப்படாத வீரனுக்காக''. பர் ற்ட்ங் மய்ந்ய்ர்ஜ்ய் நர்ப்க்ண்ங்ழ் இப்போது என் நூலகத்தில் அப்புத்தகம் இல்லை. எழுதிய ஆசிரியர் பெயரும் நினைவில் இல்லை. ஆனால் வியட்நாமில் விடுதலைப் போராளிகளுக்கெதிரான போரை நெறி செய்த தளபதிகளில் ஒருவரால் எழுதப்பட்டது. தான் எதிர்கொண்டு, சித்திரவதை செய்து தானே சுட்டுக்கொன்ற விடுதலை வீரன் ஒருவனிடம் உண்மையில் ராணுவத் தளபதியாகிய தனது மாண் பும் மேன்மையும் தோற்றுப்போன அனுபவத்தை மென்மையாகப் பதிவு செய்யும் புத்தகம். நான் படித்த மறக்க முடியாத புத்தகங்களில் இதுவும் ஒன்று.

வியட்நாமிய விடுதலை வீரனொருவன் அமெரிக்கப் படையிடம் சிக்கிக் கொள்கிறான். உளவுப் பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் அவன். உண்மைகள் நிறையத் தெரிந்தவன். நய மாகப் பேசி அவனை தம் வயப்படுத்த முயல்கி றார்கள். விடுதலை, இன்ப வாழ்க்கை என விரும் பும் எதானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறார் கள். ஆனால் அந்த வீரனோ உறுதி யாக நிற்கிறான், விடு தலையை விற்க மறுக்கிறான். அவனை துப்பாக்கியால் அடிக்கிறார்கள். பற்கள் உடைந்து, உதடுகள் வீங்கி, இரத்தம் வழிகிறது. ""எப்படியிருக்கிறது உன் விடு தலை?'' என ஏளனமாய் கேட்கிறார்கள். அதற்கு அந்த வீரன் பதில் சொல் வான்: ""வலிக்கிறது, ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை -வெல்லவும் முடியாது.''

அமெரிக்க ராணுவத் தினரின் கோபம் கிறுகிறுக் கிறது. அவனது கை, கால் விரல்களின் நகங்களை இரும்புக் குறடி கொண்டு இரத்தம் பீறிடப் பிடுங்கி விட்டு முன்னிலும் வக்கிர மாய் கேட்பார்கள் - ""இப்போ எப்படியிருக் கிறது உன் விடுதலை இலட்சியம்...?'' அப் போதும் அவன் பதில் சொல்வான்: ""வலி தாங்க முடியவில்லைதான்... ஆயி னும் இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை, வெல்லவும் முடியாது''.

ஆத்திரம் தலைக் கேற அவன் கால்களை அடித்தும் கைகளை திருகியும் உடைக்கிறார் கள். முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள். துப்பாக்கியை அந்த வீரனின் தலைநோக்கி நீட்டியபடியே அமெரிக் கத் தளபதி பைத்தியம் தலைக் கேறியவனாய் கத்துவான் - ""நாயே... சாகப்போகிறாய்... இப் போதுகூட உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விருப்பமில் லையா?'' உச்ச வேதனையினூடே யும் முகம்மலர சாந்தம் வருவித்துக் கொண்டு அந்த வீரன் தன் இறுதி வார்த்தைகளாகச் சொல்வான். ""ஐயா... உங்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சில நொடிகளில் நான் கொல்லப்படுவேனென்பதும், மரணம் என் அருகில் நிற்கிறதென்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் வெற்றி பெற்றவனாகவே நான் போகிறேன். என்னை நீங்கள் வெல்ல வில்லை. உயிர் பிரியும் வேளையிலும் என் இலட்சியத்தை நீங்கள் காட்டும் எச்சில் சுகங்களுக்காய் விற்பதாக இல்லை. என்னைச் சுடும் அக் கணத்தில் உங்கள் படுதோல்வி முழுமையாகும்'' என கூறிக் கொண்டே "சுடுக' என்கிறான்.

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் படம் பாட்ஷா. அதை எப்படி சுமாராக கொடுப்பது என்று ரொம்ப யோசித்து ’வேட்டைக்காரன்’ ஆக்கியிருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் படம் பாட்ஷா. அதை எப்படி சுமாராக கொடுப்பது என்று ரொம்ப யோசித்து ’வேட்டைக்காரன்’ ஆக்கியிருக்கிறார்கள்.



அப்படியே பாட்ஷா மாதிரி இருக்கு என்று சொல்லிவிடக்கூடாது என்றும் யோசித்திருக்கிறார்கள். அதனால் தெலுங்கில் ரவிதேஜா-அனுஷ்கா நடித்த விக்ரமாகுடு படத்தில் கொஞ்சம் சுட்டிருக்கிறார்கள். அபோகலிப்டா படத்தில் இருந்து கொஞ்சம்(என்கவுண்டரில் இருந்த தப்பிக்க அருவியில் குதிக்கும் காட்சி) சுட்டிருக்கிறார்கள்.



அப்புறம், வழக்கமாக மசாலாப்படங்களில் பார்த்து வரும் பல காட்சிகள்தான் திரைக்கதை. முப்பது வருசத்துக்கு முன்பு எடுத்த மாஸ் ஹீரோ அறிமுகமாகுற காட்சியை இன்னமும் எடுத்துக்கிட்டு இருக்குறாங்க. விஜய் அறிமுகமாகும் காட்சியும் அப்படித்தான்.



முதல் நாள் முதல் காட்சி. ஒரு பாட்டுக்கு கூட ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்கவில்லை. கரிகாலன் காலப்போல....என்று பாட்டு வருவதற்குள்ளாகவே தம்மடிக்க கிளம்பிட்டாங்னா.



நான் அடிச்சா தாங்கமாட்ட..என்று விஜய் பாடுவது பொறுத்தமாக இல்லை. அவர் உடல் வாகுவிற்கு இந்த பாடலைப்பாடுவது தமாஸ் ரகம்ங்னா. இதுல வேறு அவரது மகன் அந்த பாட்டைப்பாடி கொஞ்சம் ஆடுகிறார். அவருக்கே பொறுத்தமா இல்லேன்னா இவருக்கு?

பின்னனி இசையின் போது விஜய் ஆண்டனிக்கு என்ன நடந்திருக்கும்? மனுசர் ஏன் இப்படி சொதப்பியிருக்கிறார். சண்டைக்காட்சியில் சோக கீதம் வாசிக்கிறார்.



’உலகம் எப்பவும் பயப்படுவதற்கு தயாராக இருக்கு..பயமுறுத்தவன் இருந்துகிட்டுதான் இருப்பான்’, ’இது அரசு முத்திரை..இதுல மை தடவி பேப்பர்ல குத்துங்க..மக்கள் வயித்துல அடிக்காதீங்க’, என்று நச் வசனங்கள் இருக்கு.

ஆனால் வெகு நீ..................ளமான வசனங்கள் தான் அதிகமாக இருக்கிறது.



அந்த வசனத்திற்கெல்லாம் வாயை ஆ!என்று பிளக்கிறார்கள். வசனத்திற்கு மட்டுமல்ல நிறைய காட்சிகளுக்கும் கொட்டாவி பறக்கிறது.



விஜய் ரொம்ப இளமையாக தெரிகிறார். அதனால்தான் அனுஷ்கா விஜய்க்கு அக்கா மாதிரி தெரிகிறார். ஆனால் இவரின் கிளாமர்தான் வறண்ட பாலைவனத்தில் ஆறுதலான நீறூற்று.



கொச்சின் ஹனிபா டயலாக் டெலிவரியில் கொஞ்சம் கலகலக்க வைக்கிறார். மனோபாலா சாயாஜிஷிண்டேவிடம் பேட்டி எடுத்து கலகலக்கவைக்கிறார். பள்ளித்தோழன் சத்யன் கொஞ்சம் கடிக்கிறார். கல்லூரித்தோழன் ஸ்ரீநாத் கடித்து குதறுகிறார்.








பல அட்டம்ப்ட்டுக்கு பிறகு +2வில் பாசாகி அப்புறம் காலேஜூக்கு விஜய் போகும் போதுதான் தியேட்டரே கலகலக்கிறது. ஆனால் கதைப்படி இது சீரியஸான காட்சி.



பாட்ஷாவில் ரஜினி ஆட்டோ ஓட்டுவது போல் இதிலும் ஆட்டோ ஓட்டுகிறார் விஜய். ரஜினி ஆட்டோ ஓட்டி தங்கைகள், தம்பியை படிக்க வைப்பார்.



இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதற்காகத்தான் விஜய் ஆட்டோ ஓட்டி அந்த வருமானத்தில் தானே படிக்கிறார்.

பாட்ஷா படத்தில் ஏ பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பாடலுக்கு படிக்கட்டுகளில் இருந்து ஸ்டைலாக இறங்குவார் ரஜினி. காரில் ஒரு ஓரமாக ஸ்டைலாக அமர்ந்து சாலையை லுக் விடுவார்.



இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதனால்தான் புலி உறுமுது புலி உறுமுது பாடலுக்கு படிக்கட்டுகளில் ஸ்டைலாக ஏறுகிறார் விஜய். காரில் நடுவில் அமர்ந்து லுக் விடுகிறார்.

சுழல் நாற்காலியில் பாட்ஷாவில் ரஜினி மிரட்டுவார். இதிலும் விஜய் மிரட்டுகிறார். ஆனால் காமெடித்தனமாக இருக்கிறது.

போலீஸ் அதிகாரி ஷாயாஜிஷிண்டே, வில்லன் ஜிந்தா கலக்கியிருக்கிறார்கள். தன் சின்ன வீட்டை ஜிந்தாவின் மகன் அபகரித்துவிட அதுவரை ஜிந்தாவுக்கு ஜால்ரா அடித்தவர் விஜய் பக்கம் வந்துவிடுகிறார் ஷாயாஜி.



ஏகப்பட்ட ரவுடிகள், ஏகப்பட்ட அடிதடிகள் இருந்தாலும் அரிவாள், ரத்தம் இல்லாதது ஆறுதல் (இருக்கு ஆனா இல்ல). சத்யனை கொன்று அட்டைப்பெட்டிக்குள் வைத்து அனுப்பினாலும் அவ்வளவாக நெஞ்சை பிசையவில்லை.




வேட்டைக்காரன் நல்ல கதைதான். ஆனால் வேட்டையாடிய விதம் சரியில்லை. நேர்மையான போலீஸ் அதிகாரி தேவராஜ் மாதிரி தானும் ஆகவேண்டும் என்று லட்சியம் வளர்க்கிறார் விஜய். தேவராஜ் எப்படியெல்லாம் உயர் அதிகாரி ஆனாரோ அதே மாதிரி தானும் வரவேண்டும் என்று துடிக்கிறார் விஜய். அவர் மாதிரி ஆகும் வரை பொறுத்திருக்காமல் நல்ல விசயங்களை அங்கங்கே தட்டிக்கேட்கிறார்.



ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத்தள்ளும் தேவராஜ் குடும்பத்தை அவரின் கண்ணெதிரிலேயே எரித்துவிடுகிறார்கள்.



இத்தீவிபத்தில் தேவராஜின் கண்பார்வையும் போய்விடுகிறது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்.



அதனால் சென்னையில் வழக்கம் போல் ரவுடியிசம் தலைதூக்கிறது. அதை தட்டி தரைமட்டமாக்கும் விஜய்க்கு ’எனக்கொரு மகன் இருந்தால் என் பதவி அவனுக்கு கிடைக்கும்.

உன்னை என் மகனாக நினைக்கிறேன். நீ இனிமேல் பதவியில் இருந்துகொண்டு தைரியமாக தட்டிக்கேள்’ என்று விஜய்க்கு பதவி கிடைக்க செய்கிறார் தேவராஜ்.க்ளைமாக்ஸ்.



பால் அபிஷேகம், சரவெடி, குதிரையில் ஊர்வலம், கரகாட்டம், கச்சேரி என்று தியேட்டருக்கு முன்பு அமர்க்களப்படுத்திய ரசிகர்கள் தியேட்டருக்குள் ஒரு சில (இடங்களைத் தவிர) கடைசி வரை கப்சிப் என்று இருந்தார்கள். கொட்டாவியின் அடுத்தகட்டத்துக்கு போயிருப்பார்கள் போலிருக்கிறது.



அரசியல் பிரவேச நேரத்தில் அதிரடியாய் வந்து ரசிகர்களை உசுப்பேத்த வேண்டிய விஜய், ஏன்

இப்படி சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றுக்கினார்.

ஓஷோ சிந்தனைகள்

மீண்டும் புல் தானாகவே வளருகிறது.

இறந்த காலம் பற்றி நினைத்தவுடனே, கற்பனை வந்து விடுகிறது, எதிர்காலம் பற்றி நினைத்தவுடனே, தர்க்கம் தோன்றிவிடுகிறது. நிகழ்காலம் பற்றி நீங்கள் எப்படி நினைக்க முடியும்?

நிகழ்காலத்தில் வாழலாம். அவ்வளவுதான்.

இந்தக் கனப்பொழுது மிக நுட்பமானது. மிகச் சிறியது; அணுவைப் போல வேறு எதுவும் அதற்குள் நுழைய இடமே இல்லை. சிந்தனைக்கு இடம் வேண்டும், வசதியான அறை வேண்டும், நிகழ் கணத்திற்குள் இடமே கிடையாது, வெறும் ‘இருத்தல்’ மட்டுமே அதில் உண்டு.
ஆகவே, நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது, சிந்தனை நின்று விடுகிறது. சிந்தனை அற்றது நிகழ்காலம்தான். சமய வழிப்பட்ட மனம் எதிர்காலம் பற்றிக் கவலைப்படாது. முன்பு என்ன நடந்தது என்பது பற்றியும் நினைத்துப் பார்க்காது. கணத்திற்குக் கணம் வாழ்வது சமய வழிப்பட்ட மனம்.
ஒரு கணம் மறைந்ததும், மறு கணம் வந்துவிடுகிறது. ஒவ்வொரு கணமாக வாழ்ந்து செல்வது அது. வருகிற ஒவ்வொரு கணத்திற்குள் வாழ்கிறவர் சமயவாதி. அவர் ஆறு போன்றவர்.
சமயவாதி, சமய மனிதர், சமய மனம் எப்போதும் இடையறாது இயங்கிக் கொண்டே இருக்கும்; நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதை மிகமிக ஆழமாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், அவரது இயக்கத்திற்கு ஒரு நோக்கம் இருக்காது. எதை நோக்கியும் அது இயங்காது. சும்மா இயங்கும் - ஏன்னென்றால் இயக்கம்தான் அதன் இயல்பு; எதார்த்தம்.
இயக்கமே எதார்த்தத்தின் இயல்பு. இயக்கம் எதார்த்தமாய் இயங்குகிறது. நதி நீரில் மிதப்பவரைப் போல, அவர் கால நதியின் ஓட்டத்தில் மிதந்து செல்பவர். ஒவ்வொரு கணமும் அவர் உயிர் வாழ்பவர்; ஒவ்வொரு கணமும் இயங்கிக் கொண்டிருப்பவர்.
அவர் ஒன்றுமே செய்வதில்லை. அவர் அந்தக் கணத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
அந்த வினாடி நகர்ந்ததும், அடுத்த வினாடி வந்து விடுகிறது. அதிலும் அவர் வாழ்கிறார்.
**

இயற்கையாக, அமைதியாக உள்நோக்கியபடி வாழுங்கள், நீங்க நீங்களாக, தனிமையாக, அமைதியாக உங்கள் மன ஓட்டத்தை கவனித்தவாறு சிறிது நேரம், தினசரி இருக்க முயற்சி செய்யுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் எண்ண அலைகள் குறைய ஆரம்பிக்கும். ஒரு நாள், உங்கள் மனம் அமைதியாகி எண்ணம் அனைத்தும் நின்றுவிடும். அந்த அமைதியில், நிசப்தத்தில் மனம் காணாமல் போய்விடும். அப்பொழுது நீங்கள் அங்கே இருக்கமாட்டீர்கள். அதுவுரை நீங்கள் என்று கருதி வந்தது உங்கள் மனதைத்தான் என்பதை நன்றாகப் புரிந்து கொள்வீர்கள்.
**
ஞானத்திற்கும் அப்பால்
வாழ்க்கை மீண்டும் ஒருவருக்குக் கொடுக்கப்படும் என்பது நிச்சயமில்லை. இந்தமுறை அது ஏன் தரப்பட்டுள்ளது என்பதில் கூட நிச்சயமில்ல. நீ அதற்குத் தகுதியானவனா? அதை நீ சம்பாதித்திருக்கிறாயா? உயிர் வாழ்தல் அதை உனக்கு கொடுக்கக் கடமை பட்டுள்ளதா? அது ஒரு சுத்தமான பரிசு, உயிர் வாழ்தலின் அதிகமான நிறைவின் மூலம் வரும் பரிசு. நீ அதற்குத் தகுதியானவனா இல்லையா என்றெல்லாம் அது கவலைப்படுவதில்லை. அது உனது தகுதிகளை பற்றிக் கேள்வி கேட்பதில்லை. உனது நன்னடத்தை ஒழுக்கம் இவை பற்றி விசாரிப்பதில்லை. உன் மீது எந்த வேண்டுகோளையும் விதிப்பதில்லை, எந்தவிதமான விதிமுறைகளும் இன்றி வெறுமனே அது உனக்குத் தரப்படுகிறது. இந்தப்பரிசு ஒரு வணிகரீதியானது அல்ல. உன்னிடம் எந்தவித எதிர்ப்பார்ப்புகளையும் அது பதிலுக்குக் கேட்பதில்லை. உன்னிடம் அதை கொடுத்து நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று முழு சுதந்திரத்தையும் அது அனுமதிக்கிறது.
**
கடவுள் தன்மை
"ஒரு மரத்துக்கு அருகில் சென்று, அதனுடன் பேசுங்கள்(யாரும் பார்க்காதபோது). அதைத் தொட்டுத் தழுவிக்கொள்ளுங்கள். அதை உணர்வுடன் சந்தியுங்கள். அதன் அருகில் உட்கார்ந்து அந்த மரமும் உங்களை உணரச் செய்யுங்கள். அது உங்களை,"நீங்கள் மிகவும் நல்லவர். எந்தக் கெடுதலும் எண்ணாதவர்!" என்று உணரட்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக இந்த நட்பு அதிகரிக்க, நீங்கள் எப்பொழுதெல்லாம் அதன் அருகில் வருகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் அதன் தன்மையில் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள்.
நீங்கள் தொடும்பொழுதெல்லாம் ஒரு குழந்தையைப்போல குதூகலம் அடையும். நீங்கள் அருகில் உட்கார்ந்திருக்கும் போதெல்லாம் அதன் சிநேகத் தன்மையை உணர்வீர்கள். நீங்கள் துக்கமான மன நிலையில் அதன் அருகில் வரும்போதெல்லாம் துக்கம் மறைந்து போவதை உணர்வீர்கள்.அப்போதுதான் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
நீங்கள் அந்த மரத்தை மகிழ்ச்சி அடையச் செய்யலாம். அதுபோல, அந்த மரமும் உங்களை மகிழ்ச்சி அடையச் செய்யும்! வாழ்க்கை முழுக்கவும் ஒருவரை ஒருவர் நேசித்து, சார்ந்து இருப்பதை உணர்வீர்கள்.இந்த சார்புடைய தன்மையைத்தான், நான் கடவுள் தன்மை என்று அழைக்கிறேன்."
**
நீ உன் தந்தையை மதிக்க கற்பதற்க்குள், உன்னை மதிக்காத ஒரு ஜீவன் இவ்வுலகில் வந்து விடுகிறான்
**
பற்று என்பது கட்டுப்பாட்டிற்கான ஒரு காரணம் என்றால், பின்னர் பற்றற்றருப்பதுதான் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும்.
எதிர்பார்ப்புகள்தான் உன்னை துக்கத்தில் அழ்த்துகின்றன என்றால் பின்னர் எதிர்பாராமை உன்னை துக்கமின்மைக்கு அழைத்துச்செல்லும்.
கோபம் உன்னுள் ஒரு நரகத்தை ஏற்ப்படுத்தினால், அதற்கு எதிரான் கருணை உன்னுள் ஒரு சொர்க்கத்தை எற்படுத்தும்.
உனது துன்பத்திற்கு எது காரணமோ, அதற்கு எதிரானதுதான் சந்தோஷத்திற்கான் காரணமாகும்.
ஆகவே கட்டுப்பாடுகளை நீக்க மனித விழிப்புணர்வின் முடிச்சுகள் எவ்வாறு உள்ளன என்பதை முதலில் நீ புரிந்து கொள்ள வேண்டும்.
**
சத்தியம் நீந்துவதனால் அல்ல - மூழ்குவதனாலேயே கண்டடையக் கூடியது. நீந்துதல் ஒரு மேல்மட்ட நிகழ்ச்சி. ஆனால், மூழ்குதல் என்பது உன்னை முடிவில்லாத ஆழங்களுக்கு எடுத்துச் செல்வது
**
அதிக புழக்கத்திலிருக்கும் நாணயம் தேய்ந்து தேய்ந்து செல்லாக் காசாகிவிடுவது போல், அதிக புழக்கத்திலிருக்கும் சொற்கள் நாளடைவில் அதன் உண்மையான அர்த்தத்தை இழந்துவிடுகிறது
**
தனியாக இருக்க எவரும் விரும்புவதில்லை. அவருக்கு நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்! நண்பர்கள் தேவைப்படும்வரை அவர் சரியான நண்பராக இருக்க முடியாது. ஏனென்றால் தேவை என்பது மற்றவரை ஒரு பொருளாக தாழ்த்தி விடுகிறது. தனித்திருக்க எவரால் முடியுமோ அவர் மட்டுமே நண்பராயிருக்கவும் முடியும். நட்பு- அது அவர் தேவை அல்ல. அவரது மகிழ்ச்சி.
**
வாழ்க்கை மீண்டும் ஒருவருக்குக் கொடுக்கப்படும் என்பது நிச்சயமில்லை. இந்தமுறை அது ஏன் தரப்பட்டுள்ளது என்பதில் கூட நிச்சயமில்ல. நீ அதற்குத் தகுதியானவனா? அதை நீ சம்பாதித்திருக்கிறாயா? உயிர் வாழ்தல் அதை உனக்கு கொடுக்கக் கடமை பட்டுள்ளதா? அது ஒரு சுத்தமான பரிசு, உயிர் வாழ்தலின் அதிகமான நிறைவின் மூலம் வரும் பரிசு. நீ அதற்குத் தகுதியானவனா இல்லையா என்றெல்லாம் அது கவலைப்படுவதில்லை. அது உனது தகுதிகளை பற்றிக் கேள்வி கேட்பதில்லை. உனது நன்னடத்தை ஒழுக்கம் இவை பற்றி விசாரிப்பதில்லை. உன் மீது எந்த வேண்டுகோளையும் விதிப்பதில்லை, எந்தவிதமான விதிமுறைகளும் இன்றி வெறுமனே அது உனக்குத் தரப்படுகிறது. இந்தப்பரிசு ஒரு வணிகரீதியானது அல்ல. உன்னிடம் எந்தவித எதிர்ப்பார்ப்புகளையும் அது பதிலுக்குக் கேட்பதில்லை. உன்னிடம் அதை கொடுத்து நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று முழு சுதந்திரத்தையும் அது அனுமதிக்கிறது.
**
நீங்கள் பிறக்கும் பொழுது, மனமற்று , ஒரு யோகியாகவே பிறக்கிறீர்கள், அதேபோல் நீங்கள் இறக்கும் பொழுதும், மனமுற்று, ஒரு யோகியாகவே இறக்க வேண்டும்.
**
சிலவற்றைப் பார்க்கையில் அழகாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் உங்களுக்குள் இருக்கும் மற்றொரு அழகான விஷயத்தை அது ஒத்திருக்கிறது.
**
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை. நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும்.